உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இனிய முகத்துடன் ஏற்போம்!

இனிய முகத்துடன் ஏற்போம்!

இவர் செல்வச் சிறப்புடன் வாழ்கிறார், நமக்கு அல்லாஹ் எதையும்  தருவதில்லை, இவருக்கு படிப்பு நன்றாக  வருகிறது. நமக்கு தலையில் எதுவும் ஏற மறுக்கிறது... இப்படி அடுத்தவர்களை தங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் உலகம் இது.இத்தகைய ஒப்பீடு கூடாது என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் அதனதன்அளவுமுறையுடன் தான் படைக்கப்பட்டுள்ளது. புத்திக்கூர்மையாக இருப்பதும், புத்திக்குறைவாக இருப்பதும் கூட என்று அவர்கள்சொல்கிறார்கள்.புத்திசாலித்தனம் சிலருக்கு இல்லை என்றால், ஏதோ  காரணத்துடன் தான் அல்லாஹ் அவரை அப்படி படைத்துஇருக்கிறான் எனப் பொருள் கொள்ள வேண்டுமே தவிர, அதிகம் படித்தவர்கள் புத்திசாலி அல்லாதவர்களை மட்டம் தட்டி பேசக்கூடாது.மனிதன் தனக்கு அல்லாஹ் தந்துள்ள விஷயங்களுடன் திருப்தி கொள்ள வேண்டும்.மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது (இறைவன் தனக்கு தந்துள்ளவற்றின் மீது) திருப்தி அடைவதாகும். மனிதனுக்குரிய தீமை அல்லாஹ்விடம் நன்மையை வேண்டுவதாகும் (இவரைப் போல் எனக்கும் வேண்டும் என ஆசையுள்ள மனதுடனோ, பொறாமை யுடனோ இறைவனைவேண்டுதல்) இன்னும் மனிதருக்குரிய தீமை அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தி அடைவதாகும். (இதையெல்லாம் விட, ஆண்டவன் இப்படி நம்மைப் படைத்து விட்டானே, இது உனக்கே அடுக்குமா என கேள்வி கேட்பது பாவத்திலும் பாவமாகும்).இந்த விதியை மாற்ற ஏதாவது வழி இருக்கிறதா என நாயகம்(ஸல்) அவர்களைக் கேட்டால் ஒரே ஒரு வழியைத்தான் சொல்கிறார்கள்.துஆ பிரார்த்தனையை விட வேறு எதுவும் விதியை மாற்ற முடியாது என்று.ஆம்... நாம் அன்றாடம் இறைவனை தொழுவோம், அவன் தரும் இன்ப துன்பங்களை இனிமையான முகத்துடன் அனுபவித்து வந்தாலே, கருணையுள்ள இறைவன் நம் துன்பங்களை நிச்சயம் குறைத்து விடுவான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !