சிவன்மலையில் பால் வைத்து பூஜை!
காங்கயம் : திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், பல ஆண்டுகளாகவே ஆண்டவன் உத்தரவு பெட்டி நடைமுறையில் உள்ளது. பக்தர்களின் கனவில் தோன்றி சுவாமி, குறிப்பால் உணர்த்தும் பொருளை வைத்து பூஜை செய்யப்படுகிறது.
ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கும் பொருள் சார்ந்து, சம்பவங்கள் நடப்பதாக ஐதீகம் உள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி முதல் சர்க்கரை (அஸ்கா) வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது.நேற்று முன்தினம், தாராபுரம் அருகேயுள்ள கொங்கூரை சேர்ந்த சிவராமன் என்ற பக்தர் சுவாமி கனவில் சிவன்மலை ஆண்டவர் வந்து, பால் வைத்து பூஜை செய்ய உத்தரவிட்டதாகவும், சிவாச்சாரியார்களிடம் கூறினார். அதன்பேரில், சுவாமியிடம் உத்தரவு (பூ கேட்டல்) அனுமதி பெறப்பட்டது. அதன்பின், 10 மாதமாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இருந்த சர்க்கரை மாற்றப்பட்டு, பால் வைத்து, பூஜை செய்யப்பட்டு வருகிறது.