உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யப்ப பக்தர்களுக்கு ஜன.,12ல் சிறப்பு ரயில்!

அய்யப்ப பக்தர்களுக்கு ஜன.,12ல் சிறப்பு ரயில்!

பெங்களூரு: அய்யப்ப பக்தர்களுக்கு வசதியாக, பெங்களூரு - திருவனந்தபுரம் இடையே, ஜன., 12ம் தேதி, சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஜன., 12ம் தேதி இரவு 7:15 மணிக்கு, பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:20 மணிக்கு, திருவனந்தபுரத்தை அடையும். ஜன., 13ம் தேதி, மாலை 6:45 மணிக்கு, திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8:10 மணிக்கு, பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தை அடையும் என, ரயல்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !