வேதநாராயண பெருமாள் கோவிலில் ‘பகல் பத்து’!
ADDED :3947 days ago
தொட்டியம் : தொட்டியம் யூனியன், திருநாராயணபுரம் கிராமத்தில் உள்ள புகழ் பெற்ற வேதநாராயணப் பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது. இக்கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழவையொட்டி, பகல் பத்து, ராப்பத்து உற்சவம் நேற்று தொடங்கியது. ஆழ்வார்கள் தினமும் பாசுரங்கள் பாடி செல்ல, எம்பெருமாளின் உள் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. பகல்பத்தின் நிறைவுநாளான வரும், 31ம் தேதி, எம்பெருமான் மோகனாவதாரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் அருள்பாலிப்பார். வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வாக எம்பெருமான், வரும், 1ம் தேதி காலை, ஐந்து மணிக்கு, பரமபதவாசல் வழியாக ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை ஸாதிப்பார். அதை தொடர்ந்து, ராப்பத்து உற்சவம் நடக்கும்.