ராவுத்தநல்லூரில் அனுமன் ஜெயந்தி!
ADDED :3949 days ago
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த ராவுத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணை காப்பு அலங்காரம் நடந்தது. மூ ங்கில்துறைப்பட்டு அடுத்த ராவுத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு மூலநட்சத்திர ஹோமம் நடந்தது. தொடர்ந்து 12:00 மணி முதல் 1:00 மணிக்குள் சுவாமிக்கு வடமாலை, வெற்றிலை, எலுமிச்சை, பணம், துளசி, மலர்களால் மாலை அணிவித்து மஹா திருமஞ்சன நிகழ்ச்சி நடந்தது. மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு வெண்ணை காப்பு நிகழ்ச்சியும் நடந் தது. இதனைத்தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது.