தாருலிங்கம்!
ADDED :4339 days ago
மரத்தால் செய்யபடும் லிங்கங்களுக்கு தாருலிங்கம் என்று பெயர். சிவாலயங்களில் கும்பாபிஷேகக் காலங்களில் மூலலிங்கத்தைப் பெயர்த்தெடுத்து, அதன் சக்தியை தாருலிங்கத்தில் ஆவாஹனம் செய்து திருப்பணி முடியும் வரை வழிபடுவர், சந்தானம், தேவதாரு, வன்னி, அகில், கருங்காலி, அத்தி, அரசு, வேங்கை, வில்வம், முதலிய மரங்களில் தாருலிங்கம் செய்வர்.