உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நகரில் சம்பிரதாயபடி நடந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

சிதம்பரம் நகரில் சம்பிரதாயபடி நடந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

சிதம்பரம்: மார்கழி ஆருத்ரா தரிசனத்தையொட்டி நான்கு வீதிகளில் நகராட்சி சார்பில் சம்பிரதாய ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. சிதம்பரம்   நடராஜர் கோவில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நடராஜர் தேரோட்டம் 4ம் தேதியும், மகா   தரிசனம் 5ம் தேதியும் நடக்கிறது. இந்த உற்சவத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இந்நிலையில் சிதம்பரம்   நகர் தேரோடும் நான்கு வீதிகளில் இரு புறமும் சாலையோரக் கடைகள், பழ வண்டிகள் என ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் நகரில்   உள்ள சாலைகள் குறுகி அடிக்கடி போக்குவரத்து பாதிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.  ஆருத்ரா தரிசனத்திற்கு அதிக பக்தர்கள் வருகையால் ÷  மலும் போக்குவரத்து பாதிக்கும் என்பதால் நகராட்சி ஊழியர்கள் தேரோடும் நான்கு வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர். அ  ப்போது கடைக்காரர்கள் தங்கள் கடைகளுக்கு முன் இருந்த பொருள்கள், மற்றும் சாலையோர கடைகள், தள்ளுவண்டிகள் போன்றவைகளை   அவர்களாகவே அப்புறப்படுத்திக் கொண்டனர். மேற்கு சன்னதி, மேலவீதி பகுதிகளில் ஒரு சில கடைகள் முன்பு இருந்த கொட்டகைகளை சம்பி  ரதாயத்திற்காக பிரித்து விட்டு, சாலையோரம் கிடந்த குப்பைகளை அள்ளி துõய்மைப்படுத்தினர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி முடிந்த ஒரு மணி ÷  நரத்தில் பிளாட்பார பூக்கடைகள் மீண்டும் அதே இடத்தில் முளைத்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !