செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்!
ADDED :3957 days ago
செஞ்சி: செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. செஞ்சி காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 22ம் ஆண்டு 108 மகா சங்காபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 8.30 மணிக்கு மங்கள இசையும், 9.15 மணிக்கு சங்கு அலங்காரமும், 10.30 மணிக்கு மகா சங்கல்பமும், 10.40 மணிக்கு யாகசாலை பூஜையும், தொடர்ந்து சிறப்பு திரவிய ஹோமம் நடந்தது. பிற்பகல் 2.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து 2.45 மணிக்கு மகா அபிஷேகமும், 4.30 மணிக்கு 108 சங்காபிஷேகமும் நடந்தது. மாலை 5.30 மணிக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சாமி கோவில் உலா நடந்தது. பூஜைகளை கிரிசங்கர் குரு க்கள், வைத்தியநாத குருக்கள் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.