திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் இசை விழா
ADDED :3945 days ago
திண்டிவனம்: திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் இசை விழா நடந்தது. திண்டிவனம் நகரம் மற்றும் தாலுகா நாதஸ்வர தவில் இசைக்கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் 4 ம் ஆண்டு சங்கீத மும்மூர்த்திகள் இசை விழா நடந்தது. விழாவையொட்டி ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர், ஸ்ரீ தியாகப்பிரம்மம், ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் ஆகியோரது உருவபடங்களுக்கு பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு, காஞ்சி காமகோடிபீடம் ஆஸ்தான வித்வான் கோலியனூர் ராஜா, காடகநூர் சிலம் பரசன் நாதஸ்வரமும், நெல்லிக்குப்பம் ரமேஷ், தெள்ளார் ரங்கராஜன், ஈச்சேரி மூர்த்தி ஆகியோர் தவில் இசை கச்சேரி நடத்தினர். இரவு 11 முதல் அதிகாலை 3 மணி வரை மன்னார்குடி சங்கரநாராயணன், வெங்கடேசன் ஆகியோர் நாதஸ்வரமும், யாழ்ப்பானம் ஸ்ரீகாந்த் சுவாமி மலை குருநாதன் சிறப்பு தவில் இசைக் கச்சேரி நடத்தினர்.