உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி

விழுப்புரம் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி

விழுப்புரம்: விழுப்புரம் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடில் அமைந்துள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. பங்கு தந்தை ஜோசப் பிரான்சிஸ், உதவி பங்கு தந்தை மைக்கல் துரைராஜ் தலைமை தாங்கினர். அருட்தந்தை பீட்டர் ராஜேந்திரன் சிறப்பு மறைவுரையாற்றி, இயேசு பிறந்து குடிலில் வைத்து சிறப்பு ஜெபம் செய்தார். இதே போல், சி.எஸ்.ஐ., தூய ஜேம்ஸ் தேவாலயத்தில் ஆயர் ஜான் தயானந்தம் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. இதில் டாக்டர் சாந்தி மகேந்திரன், தேவாலய பொருளா ளர் சுரேஷ், முன்னாள் பொரு ளாளர் வின்சென்ட் கிங்ஸ்லி, தொழிலதிபர் ஜெயச்சந்திரன், மாவட்ட காங்., பிரதிநிதி தன்சிங் பங்கேற்றனர். விழுப்புரம் செயின்ட் சேவியர், புனித ஜென்மார்க்கினி, கல்வாரி உள்ளிட்ட தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் கூட்டு திருப்பலி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !