கடலூரில் 108 திவ்யதேச பெருமாள் தரிசனம்
ADDED :5228 days ago
கடலூர் : கடலூரில் 108 திவ்யதேச பெருமாள் சந்தனக்காப்பு அலங்கார தரிசனம் நடந்தது. கடலூர் மாவட்டம் கல்வி வளம், தொழில் வளம் பெற 108 திவ்யதேச பெருமாள் சந்தனக்காப்பு அலங்கார திவ்ய தரிசனத்திற்கு ஸ்ரீகல்யாண ஸ்ரீநிவாச பெருமாள் டிரஸ்ட் ஏற்பாடு செய்துள்ளது. இந்த தரிசனம் கடலூர் சுபலட்சுமி திருமண மண்டபத்தில் கடந்த 10ம் தேதி துவங்கியது. திருப்பதி வெங்கடாஜலபதி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், கும்பகோணம் உப்பிலியப்பன், திருவந்திபுரம் தேவநாதர் உட்பட 108 பெருமாள் சிலைகள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை டிரஸ்ட் அமைப்பாளர் கஜேந்திர ராமானுஜ தாசன் செய்திருந்தார். 108 பெருமாள் பற்றிய விவரங்களை பன்னீர்செல்வம் விளக்கினார்.