கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு பூரம் விழா
ADDED :5590 days ago
சின்னசேலம் : சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஜென்ம நட்சத்திர பூரம் திருவிழா நடந்தது. நிகழ்ச்சியில் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. மேலும் 40 பேர் கொண்ட குழுவினர் சுவாமிக்கு 1000 முறை குங்குமம் அர்ச்சனை செய்தனர். தொடர்ந்து நடந்த மகா தீபாராதனையை கணேஷ் சர்மா செய்து வைத்தார். நிர்வாக தலைவர் கோவிந்தசாமி, பூஜை குழு தலைவர் வேலுமணி, தியாகராஜன் கலந்து கொண்டனர்.