விழுப்புரம் மண்டல அபிஷேக விழா!
ADDED :3936 days ago
விழுப்புரம்: விழுப்புரம் ரயிலடி அய்யப்பசாமி கோவிலில் மண்டல அபிஷேகம் மற்றும் ஆராட்டு அன்னதானம் நடந்தது. விழுப்புரம் ரயிலடி அய்யப்பசாமி கோவிலில் நேற்று முன் தினம் காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம், அய்யப்பன் விக்ரஹம் உற்சவருக்கு ஆராட்டு விழா நடந்தது. தொடர்ந்து பால்குட ஊர்வலம் மற்றும் பால் அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் வாரபூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை அய்யப்ப பக்தர்கள் மற்றும் அனைத்து ரயில்வே ஊழியர்கள் செய்திருந்தனர்.