திருக்கோவிலூர் தபோவனத்தில் ஸ்ரீஞானானந்தகிரி சுவாமி ஆராதனை!
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் தபோவனத்தில், ஸ்ரீஞானானந்தகிரி சுவாமிகளின் 41வது ஆராதனையை முன்னிட்டு நேற்று நவக்ரக ஹோமம் நடந்தது.
திருக்கோவிலூர் அடுத்த தபோவனத்தில் ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று ஸ்ரீநவக்ரக ஹோமம் நடந்தது. காலை 6:00 மணிக்கு கோபூஜை, கணபதி ஹோமம், பாதபூஜை, சூர்ய நமஸ்காரம். 8: 00 மணிக்கு ஸ்ரீ நவக்ரக ஹோமம், பூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி அதிஷ்டானத்தில் அபிஷேகம், மகா அலங்காரம், சோட சோபவுபச்சார தீபாராதனை நடந்தது. மாலை 6: 00 மணிக்கு அகண்டதாரா நாம ஜபம் துவங்கியது. இன்று காலை 7 : 00 மணிக்கு சுக்ல யஜூர் வேதம், ரிக், சாமவேதம், தேவி பாகவதம், சங்கர பாஷ்யம், சிவாகமம் மற்றும் ஸ்ரீமத் ராமாயண பாராயணங்கள் துவங்குகிறது. மாலை 6:00 மணிக்கு அகண்டதாரா நாம ஜபம் பூர்த்தியாகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை முதல் ஜனவரி 4ம் தேதி வரை தினசரி மாலை 3:00 மணி முதல் 5:00 மணி வரையும், இரவு 7: 30 மணி முதல் 9: 30 மணிவரை பரனூர் கிருஷ்ணபிரேமி சுவாமிகளின் உபன்யாசம் நடக்கிறது. ஆராதனை தினமான ஜனவரி 6ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு விசேஷ பாதபூஜை, லட்சார்த்தனை பூர்த்தி, விசேஷ அதிஷ்டான பூஜை, 10: 15 மணிக்கு ஆராதனை, தீர்த்தநாராயண பூஜை, இரவு 7: 30 மணிக்கு ஸ்ரீவிக்கு விநாயகராம் இன்னிசை கச்சேரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தபோவன நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.