உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் சாய் பாபா தேர் உலா!

சென்னையில் சாய் பாபா தேர் உலா!

சென்னை: சென்னை, அம்பத்தூர், கமலாபுரம் ஸ்ரீ சாய் பாபா ஆலயத்தில், 8வது ஆண்டு விழாவை முன்னிட்டு, மூலவர் கேரள பாரம்பரிய முறையில் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தார். காலை முதல் சிறப்பு ஆராதனை, பூஜை, அன்னதானம் நடைபெற்றது. மாலையில் உற்சவர் ஸ்ரீ சாய் பாபா, சுவாமி ஐயப்பனுடன் செண்டை வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் ஆடல், பாடல், வாண வேடிக்கையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் நகர் வலம் வந்தார். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி செல்வகுமார் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !