உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு எப்போது?

கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு எப்போது?

பாரிமுனை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பாரிமுனை, கொத்தவால்சாவடியில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பும், தொடர்ந்து விடிய விடிய பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன.

* பாரிமுனை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோவிலில், ஜன., 1ம் தேதியன்று, அதிகாலை 4:30 மணி முதல் 5:15 மணிக்குள் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
* அதிகாலை, 6:00 மணிக்குள் உற்சவர் அலங்காரமும், மூலவர் தரிசனமும் நடக்கிறது.
* என்.எஸ்.சி., போஸ் சாலையில் உள்ள பைராகி மடத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில், அதிகாலை 4:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
* கொத்தவால்சாவடியில் உள்ள கன்யகா பரமேஸ்வரி கோவிலில், அதிகாலை 5:00 மணிக்கு, சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.
* காலை முதல் மாலை வரை ரங்கோலி போட்டியும், ஐந்து முதல் 11 வயதுடையவர்கள் மாறுவேட போட்டிகள், லவகுசா தெலுங்கு நாடகம், பரமபத விளையாட்டு, பஜனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
* எம்.கே.பி., நகர் வேங்கடேச பெருமாள் கோவிலில், அதிகாலை 4:00 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பும், மறுநாள் காலை துவாதசி அன்று, ஆயிரம் பேருக்கு அன்னதானமும் நடக்க உள்ளது.
* திருநீர்மலை ரங்கநாதபெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வரும் ஜன.1ல் சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !