உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசியை பக்தர்கள் சபரிமலைக்கு பாத யாத்திரை!

அவிநாசியை பக்தர்கள் சபரிமலைக்கு பாத யாத்திரை!

அவிநாசி : அவிநாசியை சேர்ந்த 14 பக்தர்கள், சபரிமலைக்கு பாத யாத்திரையாக புறப்பட்டுச் சென்றனர். அவிநாசி பகுதியை சேர்ந்த இவர்கள், 10வது ஆண்டாக, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து, சபரிமலைக்கு புறப்பட்டனர்.பாத யாத்திரை குழு குருசாமி ஜெகநாதன் கூறுகையில், ""தினமும் 20 முதல் 35 கி.மீ., நடப்போம். கோவில் அல்லது மண்டபம் உள்ள இடத்தில் தங்கி விட்டு, அதிகாலை 4:00க்கு துவங்கி, 11:00 மணி வரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை நடப்போம். வரும் 11ல், எருமேலி சென்று, அங்கிருந்து பெருவழியாக, சன்னிதானத்தை அடைவோம். மகர ஜோதி நாளில், சபரிமலை சன்னிதானத்தில் இருந்து, ஜோதி தரிசனம் செய்து, அவிநாசி திரும்புவோம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !