ஐயப்பன் கோவில் விளக்கு பூஜை!
வெள்ளகோவில் : வெள்ளகோவில் சோழீஸ்வர சுவாமி கோவில் வளாகத்தில் ஐயப்ப சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு 45வது ஆண்டாக ஐயப்ப பூஜா சங்கத்தினர் சார்பில் கணபதி ஹோமம், சரபேஸ்வரர் சிவ யாகம், மஹா பூர்ணாகுதி நடந்தது. மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.
மறுநாள் காலை பூர்ணாகுதி, மஹாலட்சுமி சுதர்சன ஹோமம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.ஆண்டுதோறும் ஐயப்பன் ஊர்வலம் நடந்த பின்னர் விளக்கு பூஜை நடைபெறும். ஆனால் கோவில் திருப்பணிகள் நடப்பதால் திருவிளக்கு பூஜை மட்டும் நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள், பஜனை செய்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை ஐயப்ப பூஜா சங்கத்தினர், ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.
மார்கழி 15, டிச.30: நவமி, ரமணர் பிறந்தநாள், ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்