சரநாராயண பெருமாள் முத்தங்கி சேவையில் அருள்பாலிப்பு!
பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு உற்சவர் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அரு ள்பாலிக்கிறார். பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நாளை (1ம் தேதி) வைகுண்ட ஏகாதசி, ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு மூலவர் பெருமாள் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதனையொட்டி, அதிகாலை 4:30 மணிக்கு சுப்ரபாதம், தனுர் மாத பூஜை, 5:30 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடக்கிறது. தொடர்ந்து உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பகல் 1:00 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடை திறப்பும், மாலை 6:00 மணிக்கு சாயம் திருவாராதனம், இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவையும் நடக்கிறது. திருப்பணியை முன்னிட்டு பாலாலயணம் செய்யப்பட்டுள்ளதால் உற்சவர் சுவாமி புறப்பாடு இல்லை.