ஐயப்ப சுவாமி கோவில் திருவிழா: பாலகொம்பு எடுத்து வந்த பக்தர்கள்!
வால்பாறை : வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவில் திருவிழாவில், ஐயப்ப பக்தர்கள் பாலகொம்பு ஊர்வலமாக எடுத்து வந்தனர். வால்பாறை நகர் வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி கோவிலின், 55ம் ஆண்டு திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்று முன் தினம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மாலை 4:00 மணிக்கு ராஜிவ்காந்தி நகர் மாரியம்மன் கோவிலில் இருந்து, புதிய பஸ் ஸ்டாண்டு, ஸ்டேன்மோர் சந்திப்பு, காந்திசிலை, போஸ்ட் ஆபீஸ், சுப்பிரமணிய சுவாமி கோவில் வழியாக, பாலகொம்பு எடுத்து ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.விழாவில் நேற்று மாலை 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், ஐயப்பன் எழுந்தருளினார்; திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.