உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்ட ஏகாதசி: திருப்பதிக்கு 2 டன் பூக்கள் பயணம்!

வைகுண்ட ஏகாதசி: திருப்பதிக்கு 2 டன் பூக்கள் பயணம்!

சேலம் : திருமலை திருப்பதியில் நாளை நடக்கும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்புக்காக, சேலம் திருமலை திருவேங்கடமுடையான் நித்ய புஷ்ப கைங்கர்ய சபா சார்பில், இரண்டு டன் பூக்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. திருமலை திருப்பதியில் நாளை நடக்கும் வைகுண்டு ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்புக்கா, இரண்டு டன் பூக்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. சேலம் திருமலை திருவேங்கடமுடையான் நித்ய புஷ்ப கைங்கர்ய சபா சார்பில், வன்னியர் குல ஷத்திரியர் திருமண மண்டபத்தில் பூக்கள் சேகரித்தல், தொடுத்தல் ஆகிய பணிகளில், ஏராளமான பெண்கள் ஈடுபட்டனர். பக்தர்களால் வழங்கப்பட்ட சம்மங்கி, அரளி, ரோஜா, மல்லிகை, காகிதப்பூ, தாமரை, வாழை இலை, வாழைக் கன்றுகள் என அனைத்தும் பெறப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக மண்டபத்திலேயே பூ விற்பனை ஸ்டாலும் செயல்பட்டது.பக்தர்களால் வழங்கப்பட்ட இரண்டு டன் பூக்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, லாரி மூலம் திருமலை திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பூத் தொடுக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேலம் திருமலை திருவேங்கடமுடையான் நித்ய புஷ்ப கைங்கர்ய சபா நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !