உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்ட ஏகாதசி: நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு!

வைகுண்ட ஏகாதசி: நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு!

கடலூர்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு  கடலூர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நாளை (1ம் தேதி) அதிகாலை 4:00 மணிக்கு  சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. நடுநாட்டு திருப்பதி என பக்தர்களால் போற்றப்படும் கடலூர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் பகல்  பத்து உற்சவம் கடந்த 22ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதனையொட்டி தினசரி அதிகாலை 4:00 மணிக்கு சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனம்,  கோ பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை, திருப்பாவை சாற்றுமுறை, சுவாமிகள் அலங்காரம், பகல் 12:00 மணிக்கு சுவாமிகள் புறப்பாடு,  பாராயணத்தைத் தொடர்ந்து உற்சவர் பகல் பத்து மண்டபத்தில் மண்டகப்படியாகி சேவாதள பூஜையும், மாலை 5:00 மணிக்கு சாற்று முறையும், 6:00  மணிக்கு ஆஸ்தான புறப்பாடும் நடந்தது. இந்த பகல் பத்து உற்சவம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. அதனையொட்டி நாளை (1ம் தேதி) ஆ ங்கில புத்தாண்டு தினத்தன்று சொர்க்க வாசல் திறப்புடன் ராப்பத்து உற்சவம் துவங்குகிறது. இன்று நள்ளிரவு 1:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், சி றப்பு  பூஜை, திருப்பாவை சாற்று முறைகளைத் தொடர்ந்து அதிகாலை 4:00 மணிக்கு சொர்க்க வாசலில் தேவநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு  அருள்பாலிக்கிறார். பாராயணம் சாற்று முறையைத் தொடர்ந்து பக்தர்களின் தரிசனம் நடைபெறுகிறது. புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி ÷ காவிலில் இன்று இரவு 7:00 மணிக்கு பெருமாள், உபயநாச்சியாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், நாளை (1ம் தேதி) காலை 5:00 மணிக்கு  சொர்க்கவாசல் திறப்பும் நடக்கிறது. இதேப் போன்று மஞ்சக்குப்பம் வில்வநகர் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ  பெருமாள் கோவிலிலும் நாளை சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !