சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் நாளை திறப்பு
ADDED :3991 days ago
வடமதுரை:வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் நாளை அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு திருமஞ்சனமும், 5 மணிக்கு ஆழ்வார் புறப்பாடும், 7 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடக்கிறது.எரியோடு வரதராஜ பெருமாள் கோயிலில் நாளை அதிகாலை 4.30 மணிக்கு அலங்கார திருமஞ்சனமும், அதிகாலை 5.45 மணிக்கு மேல் சொர்க்க வாசல் திறப்பும் நடக்கிறது. மண்டபம்புதூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் நாளை அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை பக்தி இன்னிசையும், பகல் 1.45 மணி வரை ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது. பகல் 2 மணிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், பிரசாதம் வழங்கப்படும்.