உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வளவனூர் குமாரபுரியில் 5ம் தேதி ஆருத்ரா தரிசனம்

வளவனூர் குமாரபுரியில் 5ம் தேதி ஆருத்ரா தரிசனம்

புதுச்சேரி : விழுப்புரம் மாவட்டம், வளவனுார், குமாரபுரியில், நடராஜ சுவாமிகளின் 176வது ஆண்டு மகா குருபூஜை, ஆருத்ரா தரிசன மகோற்சவ விழா நடக்கிறது.அதையொட்டி, 4ம் தேதி இரவு 10:00 மணிக்கு, ஆருத்திரா அபிஷேகம் துவங்குகிறது. 5ம் தேதி காலை 5:00 மணிக்கு, சந்தன அபிஷேகம், 6:00 மணிக்கு, ஆருத்ரா தரிசனம், திருவெம்பாவை பாராயணம் நடக்கிறது.காலை 10:00 மணிக்கு, மகா குருபூஜையும், சோட சோபசார தீபாரதனையும், 12:00 மணிக்கு, அமுது படைத்தலும், மாலை 6:00 மணிக்கு, பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !