உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகதுருகம் புத்தாண்டு சிறப்பு பூஜை!

தியாகதுருகம் புத்தாண்டு சிறப்பு பூஜை!

தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை நடந்தது. ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று காலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபிஷேகம் செய்து மலர் அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடந்தது. குருக்கள் நாகராஜ், சோமு ஆகியோர் பூஜைகளை செய்தனர். தியாகதுருகம் முருகன் கோவில், பகவதி மலையம்மன் கோவில், புக்குளம் கைலாசநாதர் கோவில், முடியனூர் ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவில்களில் நடந்த புத்தாண்டு சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !