உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாராயணனுக்கு ஏகாதசி அலங்காரம்!

நாராயணனுக்கு ஏகாதசி அலங்காரம்!

விழுப்புரம்: வைகுண்ட ஏகாதசியை யொட்டி விழுப்புரம் பாண்டுரங்கன் பீடத்தில் நாராயணன், ருக்மணியோடு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி விழுப்புரம் பாண்டுரங்கன் பீடத்தில் உள்ள நாராயணனுக்கு நேற்று மாலை 6:00 மணிக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. இரவு 7:00 மணிக்கு நாராயணன், ருக்மணியோடு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் 7:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை சப்தகிரி பஜனா மண்டலி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !