உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருத்திகை வழிபாடு!

கிருத்திகை வழிபாடு!

அவலூர்பேட்டை: கன்னலம், வளத்தியில் கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம் கன்னலம் செல்வ முருகன் கோவில் மற்றும் வளத்தி சக்தி முருகன் கோவிலில் மார்கழி மாத கிருத்திகை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு காலையிலும், மாலையிலும் சிறப்பு அபிஷேகம், அலங் காரம், தீபாராதனை நடந்தது. கன்னலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மூன்று கோவில்களிலும் பிற்பகலில் அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !