உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் முருகன் கோவிலில் வெள்ளித் தேர் திருவிழா!

மயிலம் முருகன் கோவிலில் வெள்ளித் தேர் திருவிழா!

மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் வெள்ளித் தேர் திருவிழா நடந்தது மயிலம் வள்ளி, தெய்வானை சுப்பரமணியர் சுவாமி கோவிலில் இன்று மார்கழி மாத கிருத்திகை, ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வெள்ளித் தேரோட்டம் நடந்தது. மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். விழாவை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தது. மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மதியம் 1 மணிக்கு கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 9 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !