ஏகாட்டூர் கைலாசநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
ADDED :3931 days ago
ஏகாட்டூர்: ஏகாட்டூர், காமாட்சியம்பாள் உடனாய கைலாசநாதர் கோவிலில், நேற்று முன்தினம், ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடந்தது. கடம்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஏகாட்டூரில், காமாட்சியம்பாள் உடனாய கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது, இங்கு, நேற்று முன்தினம், ஆருத்ரா தரிசனம் நடந்தது. முன்னதாக, மாணிக்கவாசகர் வீதிஉலா வந்தார். அதன்பின், தினமும் மாலை 4:00 மணிக்கு, மங்கள இசையும், 5:00 மணிக்கு பரத நாட்டிய நிகழ்ச்சியும், நடந்தது. பின், நேற்று, இரவு 10:00 மணிக்கு, அபிஷேகத்திற்கு வரிசை கொணர்தல் நிகழ்ச்சியும் அதன்பின், நள்ளிரவு 12:00 மணிக்கு, மகா அபிஷேகமும் நடந்தன. அதன்பின், நேற்று, காலை 5:00 மணிக்கு, மகா தீபாராதனையும், 6:00 மணிக்கு வெள்ளை சாற்றுப்படி காட்சியும், 9:30 மணிக்கு சுவாமி வீதிஉலாவும் நடந்தது.