சண்முகநாத பெருமானுக்கு வெட்டி வேர் அலங்காரம்
ADDED :5331 days ago
காரைக்குடி : விசாகத்தை முன்னிட்டு, குன்றக்குடி சண்முகநாத பெருமான் வெட்டிவேர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை 7.15 மணிக்கு மலைமீதுள்ள உற்சவ சண்முகநாத பெருமானுக்கு வேட்டி வேர் அலங்காரம் நடந்தது. பின், சுவாமிக்கு தீபாராதனை முடிந்து மலையில் இருந்து புறப்பாடாகி ஆதீன திருமடத்து கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். மடத்து சார்பில் சுவாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பகல் 11.30 மணிக்கு சந்தன அபிஷேகம் நடந்தது. இரவு 10 மணிக்கு மேல் சுவாமி வெள்ளி ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.