முடியாததும் இவரால் முடியும்!
ADDED :4326 days ago
சென்னை வேளச்சேரி- தரமணி ரோட்டில் சச்சிதானந்த நகர் உள்ளது. இங்குள்ள சச்சிதானந்தபீடத்திலுள்ள சர்வ காரிய சித்தி ஆஞ்சநேயர் சந்நிதி விசேஷமானது. அசோக வனத்திலிருந்த சீதையின் மனத்துயரை தீர்த்து ராமனின் வெற்றி செய்தியை எடுத்துரைத்தவர் ஆஞ்சநேயர். வடக்கு நோக்கி அருளும் இவருக்கு, நினைத்தது நிறைவேற சனிக்கிழமை, அமாவாசை, மூல நட்சத்திரநாளில் வடை, வெற்றிலை, துளசி மாலை அணிவித்து வழிபடுகின்றனர். நடக்குமா என்று நினைக்கும் அசாத்தியமான விஷயம் கூட இவரை மனமுருகி வேண்டினால் சாத்தியமாகும் என்பது ஐதீகம்.வேண்டுதல் நிறைவேறியதும் சந்நிதியில் மட்டைத்தேங்காய் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். ஒவ்வொரு அமாவாசை நாளிலும் சிறப்பு அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை உண்டு. வீ.பி.கே.மூர்த்தி