நட்சத்திர பிருந்தாவனம்!
ADDED :4325 days ago
சேலம், ஈஸ்வரன் கோயில் அருகில் அமைந்துள்ளது. வாசவி சுபிட்ஷா ஹால். வாசவி மகிளா சமாஜம் எனும் அமைப்பால் நிர்வகிக்கப்படும் இந்த மண்டபத்துக்கு அருகில், அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களுக்குமான 27 மரங்கள் உள்ளன. சுமார் 270 அடி சுற்றளவு கொண்ட இடத்தில், அந்தந்த நட்சத்திரர்கள், அந்தந்த நட்சத்திரத்துக்கு உரிய மரங்களை வழிபடும் வகையில், பிருந்தாவனம் போல் அமைத்துப் பராமரித்து வருகின்றனர். நடைபாதையில் அக்குபஞ்சர் சிகிச்சை முறையிலான கற்களையும் பதித்துள்ளனர். இங்கு வலம் வரும்போது, இயற்கையான சூழலும் மூலிகைக் காற்றும் உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்வு கிடைக்கும்!