சாளக்ராமத்தை பெண்கள் பூஜிக்கலாமா!
சாளக்கிராம சிலை என்பது அழகான மலையின் ஓர் பகுதி. பல ஆண்டுகளாக ஒருவித பூச்சிகள் மலையில் வாசம் செய்கின்றன. பிறகு, அந்த மலையின் ஓர் பகுதி அருவி ஜலத்தால் அடித்துச் செல்லப்பட்டு, ஓடும் நதியின் அடிப்பகுதியில் பல காலம் தங்கி விடுகின்றன. அந்த நதியின் (மண்ணின்-ஜலத்தின்) ரசத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள இந்தச் சிலைகளே சாளக்ராமம் எனப்படுகின்றது.
சாளக்ராம சிலாயாம் து நித்யம் ஸன்னிஹிதோ ஹரி: என்பதாக நேபாளத்தில் கண்டகீ நதியில் கிடைக்கும் இந்த ஸாளக்ராம சிலையில் மஹாவிஷ்ணு எப்போதும் வாசம் செய்வதாகக் கூறப்படுகிறது. இப்படிபட்ட மஹிமை வாய்ந்த சாளக்ராமத்தை பூஜை செய்யவோ அர்ச்சனை செய்யவோ ஆண்கள், பெண்கள் ஆகிய இருவருக்குமே தகுதியும் உரிமையும் உண்டு, ஆனாலும், ஸாளக்ராமத்தைத் தொட்டு அபிஷேகம் செய்வதற்கு அஷ்டாக்ஷர மந்திரம் உபதேசம் பெற்று ஜபம் செய்தவருக்கே தகுதியுண்டு. இதையொட்டியே, முன்னோர்கள் ஆண்கள் மட்டும் சாளக்ராம பூஜை செய்யலாம் என்றார்கள். சாளக்ராமத்தை புஷ்பம் போட்டு அர்ச்சித்து பூஜை செய்ய பெண்களுக்கும் தகுதியுண்டு.