கடவுள் பார்க்கட்டும்!
ADDED :4325 days ago
பத்ரிநாதரை தரிசிக்க விரும்பிய சூர்தாசர், பலரின் உதவியால் கோயில் வந்து சேர்ந்தார். இரு கண்களும் தெரியாத நிலையில் அவரது தடுமாற்றத்தைக் கண்ட பக்தர் ஒருவர் சூர்தாசரிடம், பார்வையற்ற உங்களால் எப்படி பத்ரிநாதரை தரிசிக்க முடியும்? என்று ஏளனமாகக் கேட்டார். சூர்தாசர் எவ்வித வருத்தமும் காட்டாமல் நிதானமாகக் கூறினார், ஐயா! பார்வையற்ற என்னால் பத்ரிநாதரைப் பார்க்க முடியாதுதான். ஆனால், பத்ரிநாதர் என்னைப் பார்ப்பாரே...! அவருக்குத்தான் கண்கள் நன்றாகத் தெரியுமே! நாம் கடவுளைப் பார்க்கிறோம் என்பதை விடவும், நம்மைக் கடவுள் பார்க்கிறார் என்பது உயர்வானதல்லவா? என்று பதில் கூறிய சூர்தாசரின் கரங்களைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டார் அந்த பக்தர்.