உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழனி விவேகானந்தா சேவா டிரஸ்ட் சார்பில் தேசிய இளைஞர் தின போட்டி!

பழனி விவேகானந்தா சேவா டிரஸ்ட் சார்பில் தேசிய இளைஞர் தின போட்டி!

பழனி: விவேகானந்தா சேவா டிரஸ்ட் சார்பில் ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி தேசிய இளைஞர் தின போட்டி நடத்தப்பட்டு வருகிறது .
இந்த ஆண்டு பழனி , ஒட்டன்சத்திரம், தாராபுரம் பகுதிகளில் உள்ள 65 பள்ளிகளில் இருந்து 10500 மாணவ மாணவிகள் சுவாமி விவேகானந்தரைப் பற்றி தேர்வெழுதினர் .அவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா பழனி அக்சயா பள்ளியில் நடைபெற்றது . விழாவில் மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி ராஜேஷானந்தஜி மகராஜ் , சுவாமி சமாஹிதானந்தஜி மகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினர் .

ஜூனியர் பிரிவில் பழனி அக்சயா பள்ளி மாணவி தர்ஷினி முதல் பரிசும் ஆயக்குடி அரசு உயர் நிலைப்பள்ளி மாணவி வித்யா இரண்டாம் பரிசும்  அ . கலையமுத்தூர் அரசு உயர் நிலைப்பள்ளி மாணவி மூன்றாம் பரிசும் பெற்றனர் .சீனியர் பிரிவில் கார்த்திக் வித்யா மந்திர் பள்ளி மாணவி கவிப்பிரியா முதல் பரிசும்  பி .ஆர் . ஜி  பள்ளி மாணவி சாஷ்மிதா இரண்டாம் பரிசும்  கொசவபட்டி அக்சயா பள்ளி மாணவி சிவரஞ்சனி மூன்றாம் பரிசும் பெற்றனர். சூப்பர் சீனியர் பிரிவில் பொள்ளாச்சி வித்ய நேத்ரா பள்ளி மாணவி ரூபதர்ஷனி முதல் பரிசும்  ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வசிந்து இரண்டாம் பரிசும் சங்கர் பொன்னர் மேல்நிலைப்பள்ளி மாணவி வைஷ்ணவி மூன்றாம் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசும் சுவாமி விவேகானந்தர் புத்தகங்களும் பரிசுகளாக வழங்கப்பட்டன. மேலும் ஒரு பள்ளிக்கு ஒரு சிறந்த மாணவர் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பதக்கமும் பரிசுகளும் வழங்கப்பட்டன . இது தவிர சுமார் 500 மாணவர்களுக்கு சிறப்பு பரிசாக சுவாமி விவேகானந்தர் புத்தகமும் பள்ளிகளுக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. விழாவில் நெய்க்காரப்பட்டி அரிமா சங்கம் சுப்புராஜ்   அருணாச்சல் மஹால் உரிமையாளர் செந்தில் குமார் எஸ் . ஆர் . எம்  கம்ப்யூட்டர் உரிமையாளர் பாலாஜி வழக்கறிஞர் பாலசுப்ரமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !