தீவினைகள் தீர்க்கும் துர்கை...!
ADDED :4323 days ago
வேதாரண்யம் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் கோயிலின் உட்பிராகாரத்தில், வடகிழக்கு முனையில் தெற்குநோக்கி அருள்பாலிக்கிறாள் துர்காதேவி. இந்த சன்னிதிக்கு சுந்தரிபீடம் என்று பெயர். ராகுகால வேளையிலும் வெள்ளிக்கிழமைகளிலும் இங்கு வந்து இந்த தேவியை வழிபட பில்லி-சூனியம் போன்ற தீவினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.