உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆட்டையாம்பட்டி கம்பன் கழகத்தின் மார்கழி பெருவிழா

ஆட்டையாம்பட்டி கம்பன் கழகத்தின் மார்கழி பெருவிழா

ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி, வேலநத்தம் செங்குந்தர் திருமண மண்டபத்தில், கம்பன் கழகம் சார்பில், முதலாம் ஆண்டு மார்கழி பெருவிழா நடந்தது."குரு அருளும் திருஅருளும் என்ற தலைப்பில், தேசமங்கையர்கரசி பேசியதாவது:நடைமுறை வாழ்க்கையில், ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு குருவை அமைத்து, அவரின் சொற்படி நடக்க வேண்டும். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் திருஞானசம்மந்தர் கூறிய பொன்மொழி உபதேசங்களை போதிக்கபட வேண்டும். காசிக்கு போய் விட்டுவரும் போது, ஏதாவது விட்டு வர வேண்டும் என இருக்கையில், வாரியார் தன் சொத்தையையே விட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இவர் மது, மாமிசம், சொத்துக்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். தமிழ் முதற்கடவுளான முருகனை வழிபடுவது மிகவும் சிறப்பு. இவ்வாறு அவர் பேசினார்.விழா ஏற்பாடுகளை, ஆட்டையாம்பட்டி கம்பன் கழக நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !