திருப்பூர் வீரராகவப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம்!
ADDED :3951 days ago
திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், கூடாரை வெல்லும் சீர் உற்சவம் மற்றும் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி விழா, கடந்த மாதம் 22ம் தேதி துவங்கி, பகல் பத்து உற்சவம் நடந்தது. கடந்த 1ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு, ராப்பத்து உற்சவங்கள் நடந்தன. நேற்று முன்தினம் ஆழ்வார் மோட்சம் உற்சவம் நடந்தது. மார்கழி மாதம் பாவை நோன்பு இருந்தவர்கள் நிறைவு செய்யும், கூடாரை வெல்லும் சீர் உற்சவம் நேற்று காலை நடந்தது. திருப்பாவை பாசுரங்கள் பாடப்பெற்று ஆண்டாள் உற்சவம் நடந்தது. இரவு, ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூமி தேவி தாயார் உடனமர் ஸ்ரீவீரராகவப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தாயாரையும், பெருமாளையும் வழிபட்டனர்.