உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தைப்பூச பாதயாத்திரை குழு சிறப்பு வழிபாடு!

தைப்பூச பாதயாத்திரை குழு சிறப்பு வழிபாடு!

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பத்தில், பழனி பாலதண்டாயுதபாணி தைப்பூசப் பாதயாத்திரை குழு சார்பில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை   நடந்தது. மந்தாரக்குப்பம் கெங்கைகொண்டான் கோவிலில், பழனி பாலதண்டாயுதபாணி தைப்பூசப் பாதயாத்திரை குழு சார்பில் முருகப் பெருமா  னுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்துடன், ஏராளமான பக்தர்கள்  சிவன், பார்வதி, முருகர், விநாய  கர் வேடமணிந்து பால்குடம், காவடி ஏந்தி ஊர்வலமாக மந்தாரக்குப்பம் பஸ் நிலைய ஆதிபராதி வழிபாட்டு மன்றத்துக்கு வந்தனர். அங்கு வேலுக்கு   சிறப்பு பூஜை மற்றும் குருமரியாதை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !