உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தை அமாவாசை சிறப்பு சுற்றுலா ரயில்!

தை அமாவாசை சிறப்பு சுற்றுலா ரயில்!

மதுரை: இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி. டி.சி.,) தை அமாவாசையையொட்டி வடமாநிலத்திற்கு சிறப்பு சுற்றுலா ரயிலை இயக்குகிறது. மதுரையில் ஜன., 17 மற்றும் 27ம் தேதிகளில் புறப்படும் சுற்றுலா ரயில்கள் ஈரோடு, சென்னை சென்ட்ரல் வழியாக காசி, கயா, அலகாபாத், ஹரித்துவார், ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு செல்லும். மூன்று வித கட்டண வகுப்புகள் உள்ளன. ரூ. 10,010 கட்டணம் கொண்ட ஸ்டான்டர்ட் பேக்கேஜில் தூங்கும் 2 வகுப்பு பெட்டி, தங்கும் ஹால்கள், சைவ உணவு வழங்கப்படும். ரூ.21,670 கொண்ட கம்பக்ட் பேக்கேஜில் 3ம் வகுப்பு ஏசி பெட்டி, ஏசி அல்லது ஏசி அல்லாத தங்கும் அறை வழங்கப்படும். ரூ.29,150 கொண்ட இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி, ஏசி தங்கும் அறை, ஏசி கார் வசதி செய்யப்படும். விவரங்களுக்கு 90031 40714ல் தொடர்பு கொள்ளலாம் என உதவி பொது மேலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !