உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூலவர் ஓரிடத்தில்... உற்சவர் வேறிடத்தில்...

மூலவர் ஓரிடத்தில்... உற்சவர் வேறிடத்தில்...

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகிலுள்ள கோம்பையில், மலை அடிவாரத்தில் திருமலைராயப்பெருமாள் கோயில் இருக்கிறது. இங்கு சுவாமி பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். இக்கோயிலுக்கு பின்புறம் உள்ள மலையில் சிவப்பு நிறத்தில் சுவாமியின் நாமம் தெரிகிறது. எனவே இம்மலை ராமமலை என்று அழைக்கப்படுகிறது. மலையடிவாரத்தில் உள்ள கோயிலுக்கு சென்று வர சிரமம் என்பதால், உற்சவருக்கு ஊருக்குள் தனிக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு உற்சவ மூர்த்திக்காக தனிக்கோயில் கட்டப்பட்டிருப்பது விசேஷ அம்சம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !