உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செங்காட்டங்குடி - பெயர்க்காரணம்!

திருச்செங்காட்டங்குடி - பெயர்க்காரணம்!

திருவாரூர் மாவட்டம், திருச்செங்காட்டங்குடியில் அருள்பாலிக்கிறார் கணபதீஸ்வரர். யானைமுகம் கொண்ட கஜமுகாசுரனை விநாயகப் பெருமான் சம்ஹாரம் செய்தார். இதனால் அவருக்கு உண்டான தோஷத்தைப் போக்க, இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த சிவனை வழிபட்டு தோஷம் போக்கினார். இதனால் இத்தல சிவபெருமான் கணபதீஸ்வரர் எனப் பெயர் பெற்றார். விநாயகரால் சம்ஹாரம் செய்யப்பட்ட கஜமுகாசுரனின் செங்குருதி இத்தலத்தில் ஆறாக ஓடியதால் திருச்செங்காட்டங்குடி என அழைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !