மனித முக விநாயகர்!
ADDED :4316 days ago
திருவாரூர் மாவட்டம், சிதிலபதியில் உள்ள முக்தீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கும் விநாயகப்பெருமான், ஆதி விநாயகர் என்ற பெயரில் மனித முகத்துடன் மேற்கு நோக்கி தனிச் சன்னதியில் காட்சியளிக்கிறார். இத்தலத்தில் ஓடும் அரசலாறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்கிறது. இதுபோன்ற நதிகள் ஓடும் தலங்களில் உள்ள கோயில்கள், பரிகாரத்துக்கும், வழிபாட்டுக்கும் மிகச் சிறந்தவை.