உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜம்புலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு!

ஜம்புலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு!

பொதட்டூர்பேட்டை: ஜம்புலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை, அப்பர் உழவார மன்றத்தினர், பிரதோஷ அபிஷேகம் நடத்தினர்.

பொதட்டூர்பேட்டை அடுத்த, பொம்மராஜிபேட்டையில் அமைந்துள்ளது ஜம்புலிங்கேஸ்வரர் கோவில். இங்கு பிரதோஷ அபிஷேகம் சிறப்பாக நடந்து வருகிறது. நேற்று மாலை, 4:30 மணிக்கு, நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அப்பர் உழவார மன்றத்தினர், சிவ பூத கணங்கள் முழங்க, சிவ புராணம் மற்றும் தேவாரம் பாடியபடி, சிவனைதுதித்தனர். மூலவர், ஜம்புலிங்கேஸ்வரர், விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொதட்டூர்பேட்டை, சவுட்டூர், பொம்மராஜிபேட்டை, சொரக்காய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் இதில், கலந்து கொண்டு, சுவாமியைதரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !