ஜன., ரதஸப்தமி விழாவுக்காக ராசிபுரத்தில் பூ கட்டும் விழா!
ராசிபுரம் : திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஜனவரி, 26ம் தேதி நடக்கும், ரதஸப்தமி உற்சவ விழாவுக்கு, மலர் அனுப்புவதற்காக, பூ கட்டும் விழா, ஜனவரி, 24ம் தேதி ராசிபுரத்தில் நடக்கிறது.கொங்கணாபுரம், திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை சார்பில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்ககொடி மரம் மற்றும் உள் பிரகாரங்களை அலங்கரிக்க, ராசிபுரம் சவுராஷ்டிரா விப்ரகுல பஜனை மடத்தில் இருந்து, ஆண்டுதோறும் மலர் மாலை கட்டப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.இதற்காக, இந்தாண்டு பூ மாலை கட்டும் பணி, ஜனவரி, 24ம் தேதி துவங்குகிறது. பக்தர்கள் வழங்கும் மல்லி, சாமந்தி, ரோஜா, மேரிகோல்ட், துளசி, அரளி, மருவு, தாமரை, சம்பங்கி உள்ளிட்ட, நான்கு டன் பூக்கள், கரும்பு, தென்னப்பாளை, தென்னங்குருத்து, பாக்கு குலை, இளநீர், மாங்காய் உள்ளிட்ட பொருட்களை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது."அதற்கு தேவையான பூக்களை, பக்தர்கள் வழங்கலாம் என, அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூக்கள் வழங்க விருப்பம் உள்ளவர்கள், மொபைல் எண் 97873 93939, 94435 15497 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.