உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாப்பிரெட்டிப்பட்டி கோவில் திருவிழா!

பாப்பிரெட்டிப்பட்டி கோவில் திருவிழா!

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்தூரில், வெள்ளையம்மன் கோவில் திருவிழா நடந்தது. விழாக்குழு தலைவர் ரகுபதி தலைமை வகித்தார். ஊர் பிரமுகர்கள் அம்பேத்கர், வெள்ளையன், மகேந்திரன், சிவன், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்வாமி ஊர்வலம் மாரியம்மன் கோவிலில் இருந்து அரூர் மெயின்ரோடு, பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமியை தரிசனம் செய்தனர். இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !