உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூய்மை பணிக்காக சென்ற ஐயப்ப பக்தர்கள்!

தூய்மை பணிக்காக சென்ற ஐயப்ப பக்தர்கள்!

கூடலூர் : சபரிமலை ஐயப்பன் கோவில் வளாகத்தில் சுத்தம் செய்யும் பணிக்காக, கூடலூரிலிருந்து, 60 ஐயப்ப பக்தர்கள் புறப்பட்டு சென்றனர்.சபரிமலை ஐயப்பன் கோவிலில், பக்தர்கள் பயன்படுத்தி விட்டு சென்று குப்பைகள் அகற்றும் பணிக்காக, நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்கு செல்ல துவங்கியுள்ளனர்.இப்பணிக்காக, கூடலூர் சபரிமலை ஐயப்ப சேவ சமாஜம் சார்பில், 60 ஐயப்ப பக்தர்கள் நேற்று புறப்பட்டனர். அவர்களை வழியனுப்பு நிகழ்ச்சி, மைசூர் சாலை முனீஸ்வரன் கோவில் அருகே நடந்தது. கூடலூர் வன அலுவலர் தேஜாஸ்வி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில், கூடலூர் நகராட்சி கமிஷனர் ராஜராம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !