உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவாலயங்களில் பிரதோஷ விழா!

சிவாலயங்களில் பிரதோஷ விழா!

வேதாரண்யம்: வேதாரண்யேஸ்ரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி ஸ்வாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், அர்ச்சனை செய்து வழிபட்டனர். வேதாரண்யம் நாகைரஸ்தா, காசி விஸ்வநாதர் கோவில், தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், தேத்தாக்குடி அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழகர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், புஷ்பவனம் சுகந்தவனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வுடையார் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில் ஆகிய சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !