புனித பெரிய அந்தோணியார் ஆலய தேர்த் திருவிழா!
ADDED :3919 days ago
தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு அருகே உலகம்பட்டியில் புனித பெரிய அந்தோணியார் ஆலய தேர்த் திருவிழா நடந்தது. கடந்த ஜன., 9 ல் தொடங்கி தினமும் மாலையில் கொடி பவனி மற்றும் நவநாள் திருப்பலி நடந்தது. ஜன., 18 ல் பொங்கல் பானை மந்திரிப்பு, புனித தேர்கள் அர்ச்சிப்பு நடந்தது. பின், இரவில் கோலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், வாண வேடிக்கை முழங்க 12 மின் ரதங்களின் பவனி நடந்தது. நேற்று புதுநன்மை திருப்பலி, நான்குரதங்கள் மற்றும் ஐந்துரதங்கள் பவனியுடன் விழா நிறைவடைந்தது. பாதிரியார்கள் அந்தோணிச்சாமி, கபிரியேல் அந்தோணிச்சாமி, கூட்டுறவு அச்சக சங்க தலைவர் ஜெயசீலன், அகரம் பேரூராட்சி துணை தலைவர் சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.