எல்லையம்மன் வீதியுலா!
ஆர்.கே.பேட்டை: செவ்வாடை தொண்டர்கள் இருமுடி கட்டி, ஆன்மிக பயணம் மேற்கொண்டனர். இதையொட்டி, எல்லையம்மன் கோவிலில் உற்சவம் நடந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, ராஜாநகரம் கிராமத்தில், 650 செவ்வாடை தொண்டர்கள் இருமுடி கட்டி, நேற்று முன்தினம் ஆன்மிக பயணம் மேற்கொண்டனர். இதையொட்டி, எல்லையம்மன் மற்றும் நவசக்தி பீடத்தில், சிறப்பு உற்சவம் நடத்தப்பட்டது. காலை 10:00 மணிக்கு, எல்லையம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலை 6:00 மணியளவில், உற்சவர் அம்மன், மலர் அலங்காரத்தில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, செவ்வாடை தொண்டர்களுக்கு, இருமுடி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10:00 மணிக்கு, பக்தர்கள் தங்களின் ஆன்மிக பயணத்தை துவங்கினர். இதேபோல், அம்மையார்குப்பம் பராசக்தி கோவிலிலும், நேற்று முன்தினம் குத்துவிளக்கு மற்றும் ய õகசாலை பூஜை நடந்தது.